» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!

சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)



கன்னியாகுமரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பணி நியமன ஆணையினை வழங்கினார்.

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு இன்று (15.02.2025) பணி நியமன ஆணையினை வழங்கி தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் வாகனத் துறையில் உலகளாவிய சிறந்த நிறுவனங்களான ஹூண்டாய், /போர்டு, KIA, டாடா மோட்டார்ஸ், ISUZU மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற சிறந்த வாகன பிராண்டுகளுக்கான பிரேக்குகள், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டங்களை தயாரித்து வழங்கும் HL மாண்டோ ஆனந்த் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு முதல் வருடத்திற்கு ரூ.16,500 உதவித்தொகையோடு கூடிய டெக்னீஷியன் டிரெய்னி பணியிடமும், மேலும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன் 10,000/- சேவை விருதோடு இயக்க பொறியாளர் பதவிகளுக்கு முன்னேறலாம். 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் அல்லது புரொடக்ஷன் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்து, அரியர் இல்லாமல் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் BE படிப்பைத் தொடர ஆர்வமுள்ள டிப்ளமோ மாணவர்களுக்காக HL மண்டோ பிரைவேட் லிமிடெட் நிதியுதவி செய்யும் திட்டத்தில் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ள மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட 77 பேருக்கு பணிஆணை வழங்கப்பட்டது. அதற்கான சிறப்பு முயற்சியாக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியாணை பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். மேலும் மற்றவர்கள் தொடர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள். 

வருங்காலங்களில் உங்களுக்கான வாய்ப்புகள் அமைத்துத் தரப்படும். இந்த பணி ஆணை என்பது முடிவு அல்ல. துவக்கமே. இதனை ஆதாரமாக எடுத்து வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதே உங்கள் சாதனையாக இருக்கும், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளர் ராகுல், ஓசூர் மண்டல திட்ட மேலாளர் ஜிஜின் துரை, நான் முதல்வன் சார்பில் சுந்தர், பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த மனித வள அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory