» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

10 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது

புதன் 12, பிப்ரவரி 2025 9:03:58 PM (IST)

பத்தனம்திட்டா அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவன், அந்த சிறுமியின் வாயை மூடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீஷ் (33) என்ற வாலிபர், சிறுவனுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதை தொடர்ந்து, சிறுமி சத்தம் போடவே இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அடூர் போலீசில் புகார் அளித்தனர். 

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் 2 பேரையும் கைது செய்த போலீசார் சுதீஷை சிறையிலும், 16 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory