» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு

புதன் 12, பிப்ரவரி 2025 11:29:18 AM (IST)



செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

கன்னியாகுமரி செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கொள்முதல் நிலையத்திலுள்ள அனைத்து உபகரணங்களும் சரியான முறையில் செயல்படுகிறதா என துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. 

விவசாயிகள் அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்புவதை உறுதி செய்திட வேளாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகள் நெல் வழங்குவதில் உள்ள இடர்பாடுகள் களையப்பட வேண்டும் என்றும் குத்தகைதாரர்களுக்கு உரிய சான்றுகள் வழங்கி நெல் கொள்முதல் செய்வதை வருவாய் துறையினர் மூலம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் கொள்முதல் நிலையத்தை சுற்றிலும் சுகாதார நிலை பேணப்பட வேண்டும் என்றும் அருகிலுள்ள வீடுகளுக்கு கொள்முதல் நிலையத்திலுள்ள தூசி துரும்புகள் செல்லாதவாறு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் துறை சாந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெங்கின் பிரபாகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory