» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 11:55:51 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் டெர்மினலை மூட எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் என்ற சிங்கப்பூர் நிறுவனம் சரக்கு கையாளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும், தற்போது டெர்மினலை மூடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைக் கண்டித்து பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

Panner SelvamFeb 3, 2025 - 03:20:48 PM | Posted IP 172.7*****