» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபி திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 9:06:56 PM (IST)
ஆசாரிபள்ளம் அருகே மேலப்பெருவிளை புனித சலேத் அன்னை கெபியில் வருடாந்திர திருவிழா திருப்பலி கோலாகலமாக நடந்தது.
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அடுத்த மேலப் பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாவிகளுக்கு அடைக்கலமான புனித சலேத் அன்னை கெபி உள்ளது. இந்தக் கெபியில் வருடம் தோறும் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா வானது கடந்த மாதம் ஜனவரி 31-ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கிங்கியது. பிப்.1, 2, ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் அன்னையின் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது.
மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் தேர் பவனி நடை பெற்றது. அதனை தொடர்ந்து கஞ்ஜி விருந்தும் நடைபெற்றது. மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த சலேத் தன்னை கெவியில் ஒவ்வொரு மாதமும் 19-ஆம் தேதி சிறப்பு ஜெப வழிபாடு, ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதமும் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் உணவு விருந்தும் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.