» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வங்கி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டுவிழா
வெள்ளி 24, ஜனவரி 2025 8:50:35 AM (IST)
தூத்துக்குடியில் கின்ஸ் அகாடமியில் பயின்று வங்கி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது
தூத்துக்குடி கின்ஸ் அகாடமியின் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயின்று வங்கி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று வரலாறு சாதனை புரிந்த மாணவர் வல்லரசு மற்றும் வெற்றி பெற்ற 14 மாணவர்களுக்கான பாராடடு விழா கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து தலைமையில் நடைபெற்றது. ஆங்கில பயிற்றுனர் அபித் வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற கின்ஸ் அகாடமி மாணவர் வல்லரசுக்கு பொன்னாடை அனிவித்து நினைவு பரிசு வழங்கி, அவரது பெயரை படிக்கும் வளாகத்திற்கு சூட்டிய பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசும் போது தூத்துக்குடியிலிருந்து அகில இந்திய அளவில் வெற்றி பெற்றதை முதலில் நம்பவே முடியவில்லை. பெரியவிஷயமாச்சே அதன் பிறகு நான் சொன்னார்கள் கின்ஸ் அகாடமி ஒன்று நடத்திக்கொண்டு இருக்கின்றோம் பணமே வாங்காமல் வகுப்பு எடுப்பதாக கூறினார்கள். இன்னைக்கு வந்து உள்ளே இவ்வளவு மாணவா்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தூத்துக்குடியில் இப்படி ஒரு விஷயம் நடந்து கொண்டிருப்பது எனக்கு நினைத்தாலே ரொம்ப பெருமையாக இருக்கிறது பாராட்டப்படக்குகூடிய ஒரு விஷயம் இதனுடைய நிறுவனருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் வல்லரசு நன்றியுரையாற்றினார்.
தமிழன்Jan 24, 2025 - 11:02:37 AM | Posted IP 162.1*****