» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்துார் கடற்கரையில் மண் அரிப்பு: ஐ.ஐ.டி. குழுவினர் 2வது நாளாக ஆய்வு!
புதன் 22, ஜனவரி 2025 11:19:32 AM (IST)

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடற்கரையில் மண் அரிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் இன்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடலோரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சூரசம்ஹாரம், சஷ்டி போன்ற திருவிழாக் காலங்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பக்தர்கள் இங்குள்ள கடலில் நீராடிவிட்டு முருகப் பெருமானை வழிபடுவது என்பதும் வாடிக்கை.
திருச்செந்தூர் கடற்கரையைப் பொறுத்த வரையில், பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும், பிற நாட்களில் கடற்கரையை தாண்டி கடல் நீர் வருவதும் வாடிக்கை. இந்த நிலையில், கடற்கரையில் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், 20 அடி நீளத்திற்கும், 10 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் பக்தர்கள் நீராடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து, அருகில் உள்ள அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இருந்து அமலிநகர் வரை கடல் அரிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அதில், டி.ஜி.பி.எஸ். கருவி மூலம் திருச்செந்தூர் கடற்கரையில் கடலின் ஆழம் எவ்வளவு என்பது பற்றி ஆய்வு செய்தனர்.
மேலும் கடல் நீரால் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பு எவ்வளவு தூரம் என்பதையும், தரை மட்டத்தை எவ்வளவு தொலைவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் மணல்சரிவு எவ்வளவு என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று வல்லுநர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வானது சென்னை இந்திய தொழிற் நுட்ப வல்லுநர்களால் ஆய்வு முழுமையாக மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

அடJan 22, 2025 - 11:47:25 AM | Posted IP 162.1*****