» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோவில்பட்டி பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 20, ஜனவரி 2025 4:30:26 PM (IST)

கோவில்பட்டியில் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் 1985 -86ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் 1985 -86ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 1985 - 86ல் இப்பள்ளியில் பயின்ற 83 முன்னாள் மாணவ மாணவியர், 25 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர் - மாணவிகளில் 30 பேர் மத்திய புலனாய்வுத்துறை, ஆசிரியர்கள் காவல்துறை, ராணுவம், என அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் ஏழு மருத்துவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் பலர் தொழிலதிபர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது நண்பர்களை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்த மட்டுமின்றி தங்களது பள்ளி கால நிகழ்வுகளை பேசி மகிழ்ந்தனர். தொடர்ந்து தாங்கள் பயிலும் போது தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மற்றும் அப்போது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவ மாணவிகள் மரியாதை செய்தனர். சில முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் காலில் விழுந்து தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மக்கள் கருத்து
Shenpahamurthi sJan 25, 2025 - 11:16:23 AM | Posted IP 172.7*****
Excellent
Chitra devi 81 to 86 old student batchJan 24, 2025 - 12:25:48 PM | Posted IP 162.1*****
நானும் இந்த பள்ளியில் படித்த சிம் பேட்ச் மாணவி இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் நான் கலந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எனது பள்ளி ஆசிரியர்களை 40 வருடம் கழித்து சந்தித்தது மிகவும் சந்தோஷப்படுகிறேன் இது கடவுளோட பிளஸ்ஸிங்ஸ் ஆக நினைக்கிறேன் எனது பழைய நண்பர்களையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி மிகவும் புத்துணர்ச்சி அடைகிறேன் 40 வருடங்கள் கழித்து இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டு எனது நண்பர்களையும் எனது ஆசிரியர்களின் பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை ஆண்டாள் மிக சிறப்பான விழா மிகச் சிறப்பான நிகழ்ச்சி நன்றி ராஜகோபால் இந்த அமுதன் ராதா குருசாமி லதா ரேவதி சாத்தூரப்பன் மற்றும் பலர்
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)

ஒரே மேடையில் த.வெ.க., காங்கிரஸ் நிர்வாகிகள்: குமரி அரசியலில் பரபரப்பு
புதன் 24, டிசம்பர் 2025 10:47:29 AM (IST)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)


.gif)
Shenpahamurthi sJan 25, 2025 - 11:16:43 AM | Posted IP 162.1*****