» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 17, ஜனவரி 2025 10:35:34 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஜன.18) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை 18.01.2025 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சார்ந்த மாவட்டங்களைச் சார்ந்த Prochant India, Althi Solutions, Mikan Engineering And Construction Pvt Ltd, Jonyjo Digital And Offset Printing Press Pvt Ltd, Spaceman Craft Private Limited, Capecom Engineering Private Limited, Jps Lift And Escalators Pvt Ltd, Sri Sainath Green Power Pvt, Webglits Technologies Pvt Ltd, Equalhire Logitech India Pvt Ltd, Mithra Knowledge Center, Ison Xperiences, Cabocab, Enthu Tech, Senthuraa Technologies Pvt Ltd உள்ளிட்ட 15 நிறுவனங்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவ மாணவிகள் மற்றும் வேலை தேடுவோர் இந்த முகாமில் கலந்துக் கொள்ளலாம். இந்த முகாம் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் பெறும் அளவிலான வாய்ப்புகளை மாவட்டத்திலேயே உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அதற்கான சிறப்பு முயற்சியாக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலை தேடுவோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.