» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கண்காணிப்பு அலுவலர் ஹனிஷ் சாப்ரா ஆய்வு

புதன் 16, அக்டோபர் 2024 4:35:36 PM (IST)



சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக அலுவலக கட்டுபாட்டு அறையினை கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனிஷ் சாப்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் அலுவலக கட்டுபாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் புதிய திருப்பூர் வட்டார வளர்ச்சி கழகம் சென்னை நிர்வாக இயக்குநர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் -

சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் விசைப்படகுகளின் டிரான்ஸ்பாண்டர் கருவிகளின் இயக்கம் ஆய்வு செய்யப்பட்டது. டிரான்ஸ்பாண்டர் இயக்க நிலையில் இருந்த 15 விசைப்படகுகளின் தகவல் அறிக்கையினை ஆய்வு மேற்கொண்டதோடு, தற்போது மீன் பிடித்துக்கொண்டிருக்கும் இடங்கள் குறித்து அவர்களின் கைப்பேசிக்கு நேரிடையாக அழைப்பு விடுத்து உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு நாபி மித்ரா செயலி வாயிலாக வானிலை எச்சரிக்கை செய்தி குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படுவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் மீனவர்களுக்கு கரையிலிருந்து வழங்கப்படும் வானிலை எச்சரிக்கை செய்தி கடலுக்குள் மீன் பிடிக்கும் போது கிடைக்கிறதா என்று மீனவர்களிடம் கேட்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நாபி மித்ரா செயலி வாயிலாக செயல்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்தப்பட்டுள்ள VHF, GPS, மற்றும் TRANSPONDER ஆகிய தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா தெரிவித்தார்.

ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, துணை இயக்குநர் மீன்வளத்துறை சின்னகுப்பன், உதவி இயக்குநர் மீனவளத்துறை சின்னமுட்டம் தீபா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், மீன்வளத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory