» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திரிவேணி சங்கம கடற்கரை பகுதிகளில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!

சனி 10, ஆகஸ்ட் 2024 12:31:51 PM (IST)



கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, திடீர் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையில் (Illumination of ayyan thiruvalluvar statue with laser technology) தொழில்நுட்ப திட்டத்தினை செயல்படுத்த ரூ.11.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சென்னையின் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக வளாகத்தின் அருகில் அமைந்துள்ள ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்ந்து திரையில் அய்யன் திருவள்ளுவர் சிலையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இக்காட்சிக்கூடத்தில் 200 பேர் பார்வையாளர்களாக அமரும் படி செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது தள உபகரணங்களை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆகஸ்ட் 2024-க்குள் முடிவடையும். இத்திட்டம் திருவள்ளுவர் சிலைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தனித்துவமான மற்றும் அதிவேக அனுபவத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் திருவள்ளுர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்லுவதற்கு அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலம் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூடும் இடமான திரிவேணி சங்கமம் பகுதிகளை ஆய்வு செய்து கடலில் குளிக்கும் பகுதியில் அமைந்துள்ள கல் படிக்கட்டுகளில் உருவாகும் பாசிகளை தினசரி கழுவி சுத்தம் செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், கால்களை கடலில் நனைப்பதற்கு படிக்கட்டுகளில் நிற்பதற்கு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே அப்படிக்கட்டுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகளும் கோரிக்கை வைத்தனர். 

அக்கோரிக்கையினை பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததோடு, கடல் அரிப்பு தடுப்பு துறை பொறியாளர்களிடம் அது குறித்தான ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆண், பெண் உடை மாற்றும் அறைகள் செயல்படாமால் இருப்பது குறித்து கேட்டறிந்ததோடு, அவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அவற்றை உடனடியாக திறந்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கன்னியாகுமரி பேருந்துநிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக பேருந்து சேவைகள் நடைபெறுகிறதா, குறித்த நேரத்திற்கு பேருந்து இயக்கப்படுகிறதா என ஆய்வு கேட்டறியப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதனைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் தளத்தின் மீது காணப்பட்ட கடல்மணலை அவ்வப்போது பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் எனவும். திரிவேணி சங்கமம் பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் உலகத்தரத்தில் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் தற்போது கடல் சீற்றம் அதிகமாக இருப்பதாலும், மாயக்கடல் தேன்றுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு பாதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அவர்களை பாதுகாப்பான முறையில் கடலில் நீராட அறிவுறுத்த வேண்டும் என சுற்றுலா வழிகாட்டிகள், பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

ஆய்வுகளில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் காமராஜ், உதவி சுற்றுலா அலுவலர் கீதா, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் லிசி, நாகர்கோவில் பேரூராட்சிமன்ற தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ்மைக்கேல், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory