» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணிடம் 13 பவுன் நகை மோசடி - போலீஸ் விசாரணை!!

திங்கள் 10, ஜூன் 2024 5:20:33 PM (IST)

கருங்கல் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணிடம் 13பவுன் நகை மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜன். இவரது மனைவி பெனிட்டா (31). இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,திருநெல்வேலியை சேர்ந்த சிவ சுப்பிரமணியன் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார்.

பின்னர் போனில் பேசத் தொடங்கிய அவர், தனக்கு முக்கிய பிரமுகர்களை தெரியும். அவர்கள் மூலம் ஏராளமானவர்களுக்கு அதிக சம்பளத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்து உள்ளதாக கூறினார். அதன்படி தனக்கும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து சம்பவத்தன்று சான்றிதழ் சரிபார்க்க வேண்டும் என்று கூறி வீட்டுக்கு வந்தவர் தனது கழுத்தில் கிடந்த 13 அரை பவுன் தங்க செயினை பார்த்து விட்டு தருவதாக கூறி வாங்கினார். பின்னர் செயினுடன் மாயமாகி விட்டார் என கூறி உள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார்.அதன் பேரில் பெனிட்டா அளித்த புகாரின் பேரில், சிவ சுப்பிரமணியன் மீது ipc-406 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory