» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சனி 8, ஜூன் 2024 4:59:52 PM (IST)பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆறு கரையோர பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42.00 அடியை தாண்டி 08.06.2024 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் 45.59 அடியை எட்டியுள்ளது. அணை நீர்மட்டம் அதிக மழையினால் நீர் உள்வரத்து அதிகமாக இருப்பதினால் 08.06.2024 இன்று மாலை 6.00 மணியளவில் 500 கனஅடி/வினாடி உபரி நீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் திறந்துவிடப்படுவதால் களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணத்தில் கடலில் சென்று சேரும். 

எனவே கோதையாறு, தாமிரபரணி ஆறு (குழித்துறை ஆறு) ஆகியவற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,    பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory