» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு!

சனி 8, ஜூன் 2024 11:51:39 AM (IST)கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் வளாகங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில் "கன்னியாகுமரியில் அமைந்துள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் தினமும் கால நிலைக்கு ஏற்ப விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து சென்று வருகிறது.

படகுகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. பழுதடைந்த அலுவலக கட்டிடங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory