» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு!
வெள்ளி 7, ஜூன் 2024 3:56:48 PM (IST)

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் சின்னமுட்டம் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (07.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் படி மாவட்ட நிர்வாகம் மேற்கோண்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தினை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு பணிகள் குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநர் அவர்களிடம் திட்ட வரைவு தயாரித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் 52 நிரந்தர விசைப்படகுகள் வைப்பதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளதோடு, 320 படகுகள் வைப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்.
மேலும் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகம் அருகில் விசைப்படகுகள் கட்டப்பட்டு வரும் பணியினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.ஆய்வின்போது மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 120 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
சனி 12, ஜூலை 2025 5:23:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
