» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பிரியாணி கடையில் 38 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் : கடை உரிமம் ரத்து
புதன் 15, மே 2024 3:23:48 PM (IST)
தூத்துக்குடியில் பிரியாணி கடையில் 38 கிலோ பழைய சிக்கன், பரோட்டா, சப்பாத்தி மாவு ஆகியவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்பு ஆணையர் (பொ) ஹரிஹரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, ஆகியோரின் உத்திரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ச.மாரியப்பன் தலைமையின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவானது தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலையில் உள்ள பிரியாணி கடையில் இன்று (15.05.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் போது, நேற்று சமைத்து, விற்பனையாகாமல் மீதமாகி, ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ சிக்கன், 3 கிலோ மட்டன், 1.6 கிலோ மீன் வகை, 3 கிலோ சோறு, 6 கிலோ எண்ணெய் கத்திரிக்காய், 2.7 கிலோ பிரட் ஹல்வா, 2.3 கிலோ நூடுல்ஸ், 15 கிலோ சப்பாத்தி மற்றும் பரோட்டா மாவு, தேதி குறிப்பிடப்படாமல் முன் தயாரிப்பு செய்து ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 2 கிலோ அரசி மாவு, காலாவதியான 3 லிட்டர் சோயா சாஸ் ஆகியவை கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அவை மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், உணவகத்தின் சமையலறை தூய்மையற்றும், சிலந்தி வலைகளுடன் காணப்பட்டதுடன், தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கையும் இல்லை. பணியாளர்களுக்குத் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்ற சான்றிதழும், இருப்பு பதிவேடுகளும் இல்லை. மேலும், சமையலறை நுழைவு வாயிலில் சிமெண்ட் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலும், ரெஸ்டாரண்ட் வகைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல், ரெஸ்டாரண்ட் தொழில் நடத்திவருவதும் உறுதியானது.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை அதனை இயக்க இயலாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் ச.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
TUTICORINமே 16, 2024 - 01:05:45 PM | Posted IP 172.7*****
ANIFA BRIYANI SHOP ( OPPOSITE OF AVM KAMALAVEL KALYANA MANDAPAM )
Venkatமே 16, 2024 - 01:04:03 PM | Posted IP 162.1*****
விழிப்புணர்வுக்கான செய்தி என்றால் கடையின் பெயரை வெளியிட வேண்டியதுதானே??
MANIKANDANமே 16, 2024 - 11:59:33 AM | Posted IP 162.1*****
PLS TELL TO SHOP NAME
Nizamமே 16, 2024 - 09:18:31 AM | Posted IP 162.1*****
கடை பெயர் வெளியிட பயம் ஏன்
மேலும் தொடரும் செய்திகள்

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் தற்கொலை முயற்சி!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்
வியாழன் 30, அக்டோபர் 2025 5:32:00 PM (IST)

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சிறையில் அடைப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 9:14:31 PM (IST)

நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)


.gif)
Thirunavukkarasuமே 16, 2024 - 01:36:22 PM | Posted IP 172.7*****