» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வைகாசி விசாகத் திருவிழா: மே 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செவ்வாய் 14, மே 2024 3:19:42 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 9-ம் தேதி புதன்கிழமை (மே 22) தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 9-ம் தேதி புதன்கிழமை 22.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு  இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி ((Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.06.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி.,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

K.S.ராகவேந்திராமே 14, 2024 - 03:59:25 PM | Posted IP 162.1*****

வைகாசி விசாகத்திருவிழாக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory