» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு
புதன் 3, ஏப்ரல் 2024 8:10:40 PM (IST)
நாகர்கோவிலில் சுவர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம் கட்டையன்விளையை சேர்ந்த ஜெரிவின் பேல்சன் (18), இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை ரவுண்டானாவில் இருந்து புது குடியிருப்பு செல்லும் திருப்பத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த சாலையில் கிடந்த காங்கிரிட் கட்டையில் வாகனம் ஏறி இறங்கியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் அருகில் உள்ள வீட்டின் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெரிவின் பேல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.