» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருடனை கூட நம்பலாம்; திமுககாரனை நம்ப கூடாது - விந்தியா பரபரப்பு பேச்சு

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:06:04 AM (IST)"உங்கள் வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம்; ஆனால் திமுக காரனை நம்ப கூடாது" என்று தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.  

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து நடிகை விந்தியா, மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் எட்டயபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய  நடிகை விந்தியா "திமுக கூட்டணி கட்சித் தலைவர்களையும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரையும் விமர்சித்து பேசினார்.  நீங்க திமுகவுக்கு ஓட்டு போடுவதும் குரங்குக்கு  கோர்ட் போடுவதும் ஒன்னுதான். உங்கள் வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்பலாம். ஆனால் திமுக காரனை நம்ப கூடாது. திமுக   ஒருவேளை ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தால் திமுக 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுத்தால் சிலிண்டர் இருக்கும் ஆனால் உள்ள கேஸ் இருக்காது. 

திமுக தேர்தலுக்கு முன்னாடி ஒன்னு பேசுவாங்க பின்னாடி ஒன்னு பேசுவாங்க. திமுக தேர்தல் சமயத்தில் ஓட்டை பற்றி மட்டுமே கவலைப்படுவாங்க. தேர்தல் முடிந்தவுடன் வீட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படுவாங்க என்று பேசினார். தேர்தல்  பிரச்சாரத்தில் முன்னாள் விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், அதிமுக முன்னாள் சேர்மன் சத்தியா, எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜகுமார், ஒன்றிய  செயலாளர்கள் தனவதி  மகேஷ் அதிமுக உட்பட பலர்  கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

RamsubbuApr 2, 2024 - 02:50:04 PM | Posted IP 172.7*****

6000 innu solluvanga 1000 than tharuvanga ration card kku

RamsubbuApr 2, 2024 - 02:49:02 PM | Posted IP 172.7*****

correct than

ஆம்Apr 2, 2024 - 08:18:50 AM | Posted IP 172.7*****

எதிரி உண்மையைதான் சொல்லுவார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory