» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? - கனிமொழி எம்.பி. கேள்வி

திங்கள் 1, ஏப்ரல் 2024 9:53:59 PM (IST)

சீன எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எப்போது வாய்திறப்பார்? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயர்களை மாற்றி 4வது பட்டியலை சீனா இன்று வெளியிட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை மாற்றும் சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி சீனாவின் செயல்களை நிராகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பாஜக அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சினை குறித்து எப்போது வாய்திறப்பார்?. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

IndianApr 2, 2024 - 09:54:07 AM | Posted IP 172.7*****

Wow. She is talking about national politics in Tuticorin.

ஓட்டு போட்ட முட்டாள்Apr 2, 2024 - 08:22:16 AM | Posted IP 172.7*****

இலங்கை போரின்போது உங்கொப்பன் ஏன் ஏசி ல படுத்துட்டு நாடகம் போட்டாரு, குருமா , பாலு , போன்றவர்கள் கூட ராஜபக்ஷேவிடம் பரிசு வாங்கிட்டு தின்னுட்டு வந்துட்டு, பத்திரிகையில் சீன ராக்கெட் கொடி படம் அச்சடிச்ச குரூப் தான் கேடு கெட்ட திராவிட குரூப்.

கட்டுமரன்Apr 1, 2024 - 10:54:59 PM | Posted IP 162.1*****

இதை அவர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். தேர்தல் பரப்புரையில் அல்ல.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory