» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் வாக்குசேகரிப்பு!!
ஞாயிறு 31, மார்ச் 2024 12:55:33 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜய் சீலன் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு தேர்தல் காரியாலயத்தை தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மற்றும் ஓபிஎஸ் அணி மாணவர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து விட்டு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி நகரின் முக்கிய ரீதியாக சென்று பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சித்ராங்கதன், ஓபிசி அணிமாநில துணைத் தலைவரும் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், பொதுக்குழு உறுப்பினர் விஎஸ்ஆர் பிரபு, மாவட்ட செயலாளர் உமரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் எஸ்பி வாரியார், சுவைதர், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மகளிர் அணி உஷா தேவி, அமுமுக மாவட்ட செயலாளர் டேனியல் வில்சன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

TUTOCORIN MAKKALMar 31, 2024 - 04:38:04 PM | Posted IP 172.7*****