» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் மாட்ட தடை : காவல்துறை ஆணையருக்கு கோரிக்கை!
திங்கள் 12, பிப்ரவரி 2024 3:59:55 PM (IST)

நெல்லை மாநகரில் மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் மாட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி காவல் ஆணையர் பா.மூர்த்திக்கு எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு : திருநெல்வேலி மாநகரில் சமீபகாலமாக மின் கம்பங்களில் மிகப் பெரிய விளம்பர பதாகைகள் தொங்க விடப்பட்டு வருகின்றது. இந்த விளம்பரங்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றது.
ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு விளம்பர பதாகைகளை மின் கம்பங்களில் தொங்க விடுவதை உடனடியாக தடை செய்ய அன்புடன் வேண்டுகிறோம். மேலும் நெல்லை வண்ணார் பேட்டையில் தினமும் இரவு நேரங்களில் ஆப்பிள் ட்ரீ ஹோட்டல் முன்பு ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
ஆம்னி பஸ்கள் ஓரமாக நின்று பயணிகளை ஏற்றாததால் அந்த வழியாக வரும் மற்ற வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஏற்கனவே அந்த இடத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். ஆகவே இங்கு போக்குவரத்து காவலர்களை நியமிக்குமாறும், ஆம்னி பஸ்களை சற்று தள்ளி நிறுத்தவும் உத்திரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


