» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி
வெள்ளி 12, மே 2023 10:31:19 AM (IST)

நாகர்கோவில் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9பேர் படுகாயம் அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சிலர், கோவில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு குழுவாக வெளியூர்களுக்கும் சென்று நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 3 பெண்கள் உள்பட 12 பேர் கொண்ட நடன குழுவினர் ஒரு காரில் நேற்று திருச்செந்தூர் பகுதியில் நடந்த கோவில் விழாவுக்கு ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக சென்றனர். அங்கு நள்ளிரவுக்கும் மேலாக அவர்கள் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
பின்னர் இன்று அதிகாலை அவர்கள் காரில் ஊருக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் கண்ணன் ஓட்டினார். ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளமடம் பகுதியில் வளைவான சாலையில் கார் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காருக்குள் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு முன்பே கார் எதிர்திசை நோக்கி பாய்ந்துள்ளது.
அப்போது அங்கு நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ரோஸ்மியாபுரம் செல்லும் அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது, கட்டுப்பாட்டை இழந்து சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியும், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மோதிய வேகத்தில் காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அவர்களது உடமைகளும் சாலையில் சிதறி விழுந்தன. விபத்து நடந்ததும் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். டிரைவர் கண்ணன் காரின் இருக்கையில் படுகாயத்துடன் கிடந்ததால் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் ½ மணி நேரம் போராடி டிரைவர் கண்ணனை மீட்டனர். தொடர்ந்து காரில் படுகாயத்துடன் இருந்த 8 பேர் மீட்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் டிரைவர் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆனது. மற்ற 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரை போலீசார் கயிறு கட்டி இழுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகே போக்குவரத்து சீரானது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்பி ஹரிகிரண் பிரசாத், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் ஆகியோரும் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அவர்கள் விபத்து குறித்த விவரம் கேட்டறிந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)

கூட்டுறவு பண்டகச்சாலை குடோனில் ஆட்சியர் திடீர் ஆய்வு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 3:26:14 PM (IST)

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு: மத்திய அரசு அறிவிப்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:52:35 PM (IST)

பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:18:42 PM (IST)

கேரள முதல்வர் பினராயி விஜயன் குமரி வருகை : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வரவேற்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:07:52 PM (IST)

so sdaமே 12, 2023 - 01:39:28 PM | Posted IP 172.7*****