» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை : அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் விளக்கம்!

வியாழன் 27, ஆகஸ்ட் 2026 11:31:18 AM (IST)

Nepalfloodi4i.jpg

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணமில்லை என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) விளக்கம் அளித்துள்ளது.

நேபாளத்தில் திபெத்தையொட்டி உள்ள ரசுவா மாவட்டத்தில் ஓடும் போடே கோஷி ஆற்றில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் திடீரெனக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கோஷி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் இருந்த கட்டடங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 இந்தியர்கள் உட்பட 570-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான நிலநடுக்கமே காரணம் என அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், இத்தகவலைத் திரும்பப் பெற்றுள்ள அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல; பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட நிலச்சரிவே இத்தீவிர வெள்ளத்திற்குக் காரணம். ஆனால், அப்பனிப்பாறை உடைந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட அதிர்வு, நில அதிர்வு அளவிகளில் 5.2 ரிக்டராகப் பதிவாகியுள்ளது. நில அதிர்வுத் தரவுகள், அதிர்வு அலைகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory