» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
சனி 9, மே 2026 10:30:31 AM (IST)
உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் பெரும்பாலான இறக்குமதிப் பொருட்களுக்கு 10 சதவீத வரியை விதித்தது. இதை எதிர்த்து 24 மாகாணங்களும், சில தனியார் நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2-1 என்ற கணக்கில் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது.இது தொடர்பாக 53 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது: 1974-ம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122-வது பிரிவைப் பயன்படுத்தி இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகக் கொடுப்பனவு நிலையில் (பேலன்ஸ் ஆப் பேமண்ட்) பெரும் பற்றாக்குறை நிலவும் போது மட்டுமே, 150 நாட்களுக்கு இத்தகைய வரியை விதிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு.
ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் வர்த்தகப் பற்றாக்குறையை மட்டுமே காரணமாகக் காட்டி இந்த வரி விதிப்பை செயல்படுத்தியுள்ளது. இது சட்டப்படி செல்லாது. இந்த வரி விதிப்பால் மனுதாரர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்ந்த மாகாணம் மற்றும் இரு நிறுவனங்களிடம் வசூலிக்கப்பட்ட வரியை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள். ஒரு வழியில் தடை ஏற்பட்டால், நாங்கள் மாற்று வழியில் வரி விதிப்பு முறையைச் செயல்படுத்துவோம்’’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:12:10 AM (IST)

இலங்கை ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு வழக்கு : உயர் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:15:09 AM (IST)

பாகிஸ்தானில் டிரோன் மூலம் குண்டு வீச்சு: 11 போலீசார் பலி, 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வெள்ளி 31, ஜூலை 2026 12:55:12 PM (IST)

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் மீது சர்வதேசப் பிடிவாரண்ட்: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
புதன் 29, ஜூலை 2026 4:46:39 PM (IST)

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு - மீட்புப் பணிகள் தீவிரம்!
புதன் 29, ஜூலை 2026 12:04:25 PM (IST)

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)


