» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் தொலைபேசியில் அழைப்பு விடுக்கட்டும் : பேச்சுவார்த்தையை தொடரலாம் - ட்ரம்ப்
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:13:06 AM (IST)
ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை போன் மூலம் பேசலாம் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் எங்களிடம் வரட்டும் அல்லது தொலைபேசியில் அழைப்பு விடுக்கட்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது குறித்து அவர் விவரம் அளிக்கவில்லை.முன்னதாக, அமெரிக்க அரசின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர் ஆகியோர் ஈரானுடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் செல்வதாக இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். இதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு சனிக்கிழமை அன்றே பாகிஸ்தான் சென்றது. இருப்பினும் அமெரிக்காவோடு நேரடியாக இல்லாமல் பாகிஸ்தான் மூலம் தங்களது கோரிக்கைகள், நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிட்டிருந்தது. இந்தச் சூழலில் அமெரிக்க தூதர்களின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததாக ட்ரம்ப் அறிவித்தார்.
சமநிலை தவறுகிறதா பாகிஸ்தான்? - இதற்கிடையே ஈரான் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெஸாய், எக்ஸ் தள ட்வீட் செய்துள்ளார். "பாகிஸ்தான் எங்களின் நட்பு நாடு. இருப்பினும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர்களின் மத்தியஸ்தம் அறவே பொருந்தவில்லை. அவர்களது நம்பகத்தன்மை இதற்கான காரணமாக உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அவர்களது நடுநிலை மீது சந்தேகம் எழுகிறது. எப்போதுமே ட்ரம்ப்புக்கு ஆதரவாக செயல்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை” என அதில் அவர் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை இழுபறியாகி உள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனினும் அமைதி முயற்சிக்காக காலவரையின்றி போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இதனால் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் தாக்குதலில் இந்தியர் மரணம் : கப்பல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:37:58 PM (IST)

ஹோர்முஸ் தாக்குதலில் இந்திய மாலுமி பலி: ஈரானுக்கு மத்திய அரசு கண்டனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:20:43 PM (IST)

ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டு வந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிக்கை!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:11:48 PM (IST)

ஈரானுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரஷியா: அதிநவீன உளவு விமானத்தை அனுப்பினார் புதின்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:33:19 AM (IST)

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு : 51 பேர் உயிரிழப்பு; 10 லட்சம் மக்கள் பாதிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 5:04:09 PM (IST)

வியத்நாமில் படகு கவிழ்ந்து கோர விபத்து: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
சனி 11, ஜூலை 2026 5:50:04 PM (IST)


