» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும்: டிரம்ப் மிரட்டல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:26:59 AM (IST)
ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் முக்கியக் கட்டமைப்பு வசதிகள் மீது நாளை (ஏப்ரல் 7) கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகப் பதற்றம் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை டிரம்ப் நீட்டித்திருந்தார். இருப்பினும், நேற்று முன்தினம் திடீரென 48 மணி நேரக் கெடு விதித்த டிரம்ப், "ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவோம்" என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ள புதிய மிரட்டலில் கூறியிருப்பதாவது: "ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்காக ஈரான் திறக்கத் தவறினால், வரும் 7-ஆம் தேதி (நாளை) அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கியப் பாலங்களைத் தாக்கி அழிப்போம். சர்வதேசக் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க மறுக்கும் பைத்தியக்கார நபர்கள் நரகத்தில்தான் வசிப்பார்கள்."
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது சர்வதேசச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நேரடி மிரட்டலால் மத்திய கிழக்குப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானில் பிரபல பாடகிக்கு 74 சவுக்கடிகள் தண்டனை : மனித உரிமை அமைப்புகள் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 5:37:38 PM (IST)

ஒப்பந்தத்தை மீறினால் குண்டுவீச்சு நடத்துவோம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:32:35 PM (IST)

இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் தான் நிற்கும் : உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!
வியாழன் 18, ஜூன் 2026 11:18:03 AM (IST)

உலக அளவில் நிம்மதி: அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்! எண்ணெய் விநியோகம் சீராகும்!
திங்கள் 15, ஜூன் 2026 3:52:24 PM (IST)

அமெரிக்கா - ஈரான் இடையே சமரச தூதராகப் பாகிஸ்தான் வெற்றி: ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:13:05 PM (IST)

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலைத் திசைதிருப்ப டிரம்ப் முயற்சி: ஈரான் பகிரங்கக் குற்றச்சாட்டு!
சனி 13, ஜூன் 2026 12:02:06 PM (IST)


