» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட்ட நேபாளம்!

வெள்ளி 28, நவம்பர் 2025 11:18:31 AM (IST)



இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பிராந்தியங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நேபாளத்தின் அப்போதைய கே.பி.சர்மா ஒலி அரசு, இந்த பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிட்டது. இதை அந்த நாட்டு பாராளுமன்றமும் பின்னர் அங்கீகரித்தது.

இதற்கு அப்போது இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தது.

தற்போது இந்த பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு உள்ளது. நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory