» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)



அமெரிக்காவில் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க்கை கொலை செய்தவர் குறித்த தகவலுக்கு ஒரு லட்சம் டாலர் வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க்கின் படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஒரு லட்சம் டாலர் (சுமார் ரூ.88.3 லட்சம்) சன்மானம் வழங்கப்படும் என்று எஃப்பிஐ (FBI) அறிவித்துள்ளது.

மேலும், கொலை செய்ததாகக் சந்தேகப்படும்படியான ஒருவரின் படத்தையும் எஃப்பிஐ வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்போலத் தோற்றமளிக்கும் ஒருவர், அமெரிக்க கொடி வரையப்பட்ட சட்டை அணிந்துகொண்டு, தொப்பி மற்றும் கண் கண்ணாடியுடன் பை ஒன்றையும் அணிந்தவாறு சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளார்.

அவர்தான் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம் வழங்குவதாக எஃப்பிஐ அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory