» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரே நேரத்தில் 38 நாய்களுடன் நடைபயிற்சி : தென் கொரியாவில் கின்னஸ் சாதனை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 12:05:14 PM (IST)



தென் கொரியாவில், ஒரே நேரத்தில் 38 நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்து சென்று கனடாவை சேர்ந்த வாலிபர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களை சமைத்து உணவாக உண்கிறார்கள். இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும், செல்லப் பிராணிகள் பராமரிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தென்கொரியாவில் நடத்தியது.

அதில் கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்ற வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் 38 நாய்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 36 நாய்களை நடை பயிற்சிக்கு அழைத்து சென்றதே சாதனையாக இருந்தநிலையில் அதனை முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இது இடம்பெற்றது.  சாதனையில் பங்கேற்ற அனைத்து நாய்களும் இறைச்சி கடைகளில் இருந்தும், சாலையோரங்களில் இருந்தும் மீட்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory