» செய்திகள் - விளையாட்டு » உலகம்
துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் : ஜோ பைடன் அறிவிப்பு
வெள்ளி 27, செப்டம்பர் 2024 12:47:04 PM (IST)
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை பெரிதும் கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்காவில் 2024-ல் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. சமீபத்தில் இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு தேசமாக, துப்பாக்கி வன்முறையை நாம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.
கடந்த 2023-ம் ஆண்டில், அமெரிக்காவில் துப்பாக்கி சட்டத்தை கவனிக்கும் துறை துணை அதிபர் கமலா ஹாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைத் தடுப்பதற்கும் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அவர் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், இன்னும் 6 வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அதிகரித்து வரும் துப்பாக்கி அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தில் இன்று கையெழுத்திடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஜோ பைடன், "அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும். அமெரிக்கா துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)

போர்களை பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்: போப் கிறிஸ்துமஸ் உரை
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:37:14 PM (IST)

தாய்லாந்தில் மிக பெரிய விஷ்ணு சிலை இடித்து தகர்ப்பு: இந்தியா கடும் கண்டனம்!
வியாழன் 25, டிசம்பர் 2025 5:26:09 PM (IST)

உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார் : அந்தர்பல்டி அடித்த கானா நாட்டு தீர்க்கத்தரிசி!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:59:58 AM (IST)

வங்கதேச வன்முறைச் சம்பவங்கள் கவலை அளிக்கிறது : ஐ.நா. பொதுச்செயலாளர்
புதன் 24, டிசம்பர் 2025 11:56:07 AM (IST)

இந்தியா-நியூசிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் : பேச்சுவார்த்தைகள் நிறைவு
புதன் 24, டிசம்பர் 2025 11:01:11 AM (IST)


.gif)