» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்து சர்ச்சை வீடியோ: டிரம்புக்கு கண்டனம்!!

ஞாயிறு 31, மார்ச் 2024 12:07:07 PM (IST)

அமெரிக்காவில் அதிபர்  ஜோ பைடனை இழிவுபடுத்தும் நோக்கில் வீடியோவை பகிர்ந்ததாக டிரம்புக்கு ஜனநாயக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டிரம்பும் மீண்டும் களம் காண்கின்றனர். தேர்தலையொட்டி இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

டிரம்ப் தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். கடந்த மாதம் ஓகியோ மாகாணத்தில் நடந்த பிரசாரத்தில் தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அமெரிக்கா முழுவதும் ரத்தக்களரி ஏற்படும் என டிரம்ப் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு வீடியோவால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. அந்த வீடியோவில் அதிபர் ஜோ பைடன் கை, கால்கள் கட்டப்பட்டு தரையில் கிடப்பது போன்ற புகைப்படம் காட்டப்படுகிறது. ஜோ பைடனை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த வீடியோவை பகிர்ந்ததாக டிரம்புக்கு ஜனநாயக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory