» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒருதலைக் காதல் விவகாரம்: பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:18:12 PM (IST)
கர்நாடக மாநிலம் பண்ட்வால் தாலுகா காக்யபாடா அருகே பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காக்யபாடா அருகே கொடங்கே பகுதியைச் சேர்ந்த பாலப்பா கவுடாவின் மகள் லாவண்யா (22). இவர் கல்லடுக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். லாவண்யாவின் தூரத்து உறவினரான சேத்தன் (25) என்பவர் லாவண்யாவைக் காதலிப்பதாகக் கூறித் தொடர் அச்சுறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். சேத்தனின் செயல்களை லாவண்யா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
பணிமுடிந்து வீட்டிற்குத் திரும்புவதற்காக லாவண்யா பேருந்து நிலையத்திற்கு வந்து, காக்யபாடா செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சேத்தன், பேருந்துக்குள் லாவண்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துள்ளார். இதனால் பேருந்திலிருந்து இறங்கி ஓடிய லாவண்யாவைப் பின்தொடர்ந்து சென்று, பேருந்து நிலைய வளாகத்திற்குள் அரிவாளால் தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த லாவண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சேத்தன் ஆயுதத்தைப் பேருந்து நிலையத்திலேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் லாவண்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பியோடிய சேத்தனைக் கைது செய்யத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் சம்பவத்தில் அரசு வேலை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:41:00 PM (IST)

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடக்கம்: ரூ.175 கோடி வரிப்பணம் வீண்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 11:50:45 AM (IST)

மக்களவை சபாநாயகரின் தேநீர் விருந்தில் பிரதமர் மோடியுடன் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 3:40:09 PM (IST)

இது ரீல்ஸ் காலம்; குறுக்குவழி உங்களை முடக்கிவிடும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:12:38 AM (IST)

காவிரி நீர் பிரச்சனை: கர்நாடக பந்த் அறிவிப்பு - பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:58:31 AM (IST)

நோயல் டாடாவுடன் நிர்வாகக் கருத்து வேறுபாடு: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா!
புதன் 12, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)


