» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
புனேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 65 வயது முதியவர் கைது!
சனி 2, மே 2026 3:36:16 PM (IST)
புனேயில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டின் கீழ் 65 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம்புனே மாவட்டம் போர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதான முதியவர், அந்தச் சிறுமிக்கு உணவு தருவதாக ஆசைவார்த்தை கூறி அருகில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொடூரமாகக் கொலை செய்ததாகப் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் தேடத் தொடங்கியபோது, அங்கிருந்த ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் அந்த முதியவர் சிறுமியுடன் செல்வது பதிவாகியிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும், மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த புனே (ஊரக) எஸ்பி சந்தீப் சிங் கில், "இந்த வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கு விரைவு நீதிமன்றத்தில் (Fast-track court) விசாரிக்கப்படும்" என்றும் உறுதி அளித்தார். கைதான நபர் மீது ஏற்கனவே 1998 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் குற்ற வழக்குகள் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்கு எண்ணிக்கை எதிரொலி: கொல்கத்தாவில் நாளை முதல் 60 நாட்களுக்கு 144 தடை அமல்!
சனி 2, மே 2026 4:02:16 PM (IST)

செல்போனில் எச்சரிக்கை ஒலி கேட்டால் அச்சப்பட வேண்டாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
சனி 2, மே 2026 12:26:10 PM (IST)

ஐதராபாத் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சனி 2, மே 2026 11:02:35 AM (IST)

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:46:58 PM (IST)

ஆதார் சிஸ்டத்தில் ஊடுருவல்: ஏஐ பயன்படுத்தி தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல் சிக்கியது!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:42:55 PM (IST)

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)


