» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோ நாய் செயலால் சர்ச்சை: ராகுல் காந்தி கண்டனம்

வெள்ளி 20, பிப்ரவரி 2026 12:24:21 PM (IST)



டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில், தனியார் பல்கலைக்கழகம் ஒன்று சீனத் தயாரிப்பு ரோபோவை தனது சொந்தத் தயாரிப்பு எனக் கூறி காட்சிப்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையையும் கிண்டலையும் கிளப்பியுள்ளது.

இந்த மாநாட்டில் நொய்டாவைச் சேர்ந்த கல்கோடியாஸ் (Galgotias) என்ற தனியார் பல்கலைக்கழகத்திற்கு ஒரு அரங்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அந்தப் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், 'ஓரியான்' (Orion) என்ற ரோபோட்டிக் நாயைக் காட்சிக்கு வைத்திருந்தனர். இது தங்கள் பல்கலைக்கழகத்தின் சிறமிகு மையத்தில் (Center of Excellence) உருவாக்கப்பட்ட பிரத்யேகத் தயாரிப்பு என்று கூறி, அதன் சிறப்பம்சங்களைப் பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

ஆனால், ஆய்வில் அந்த ரோபோ உண்மையில் சீனாவின் 'யுனிட்ரீ' (Unitree) நிறுவனத்தின் 'Go2' மாடல் ரோபோட்டிக் நாய் என்பது தெரியவந்தது. இது ஆன்லைனில் சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சீனத் தயாரிப்பான இதற்கு 'ஓரியான்' எனப் பெயர் மாற்றி, சொந்தத் தயாரிப்பாக விளம்பரப்படுத்தியதைச் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் அரங்கை உடனடியாகக் காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

ராகுல் காந்தி கண்டனம்: 

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: "இந்த ஏஐ உச்சி மாநாடு திட்டமிடப்படாத ஒரு விளம்பரக் கேலிக்கூத்து. இங்கு இந்தியத் தரவுகள் விற்கப்படுகின்றன; சீனத் தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. உலக அரங்கில் இந்தியாவை மோடி அரசு கேலிக்கூத்தாக்கிவிட்டது," எனச் சாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory