» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்: பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்!
சனி 10, ஜனவரி 2026 11:47:16 AM (IST)

கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கேரளாவில் உள்ள பள்ளிகளில் மலையாளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும், முதல் மொழியாக மலையாளம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக மலையாள மொழி மசோதாவையும் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், கேரள எல்லையையொட்டிய காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்னடம் பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் இதனை கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில், இந்தியாவின் நாகரீக வலிமையானது அதன் பன்முகத்தன்மையிலேயே அச்சமின்றி எப்போதும் நிலை கொண்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக எல்லை பகுதிகளான காசர்கோடு போன்றவை உள்ளன. இந்த பகுதிகளில் மலையாளம், கன்னடம், துளு, பியரி மற்றும் பிற மொழிகளும் நல்லிணக்கத்துடன் அன்றாட வாழ்க்கையை வளர்த்து வருகின்றன. கல்வி மற்றும் பிற அடையாளங்களை பல தலைமுறைகளுக்கும் கொடுத்து வருகின்றன என குறிப்பிட்டு உள்ளார்.
சிறுபான்மை சமூகத்தினருக்கான அடையாளம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் வடிவாக அவை திகழ்கின்றன. இந்த நிலையில், ஒரு தனிப்பட்ட மொழியை கட்டாயப்படுத்துவது, அந்த குழந்தைகளுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தி விடும் என தெரிவித்து உள்ள அவர், அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுகோளாக கேட்டு கொண்டார். அந்த மசோதாவை, மொழிசிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக கர்நாடக அரசு எதிர்க்கும் என்றும் அவர் கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:35:16 PM (IST)

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)

இஸ்ரோவில் இருந்து 1,000 விஞ்ஞானிகள் திடீர் விலகல்: குலசேகரப்பட்டினம் ஏவுதள திட்டம் பாதிப்பு?
திங்கள் 20, ஜூலை 2026 11:22:25 AM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)