» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)
இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதா 2025 உருவாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்ட 13 சட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய தலைமுறை நிதித் துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.11,718 கோடி: 2027-ல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்துக்காக ரூ.11,718 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பும், 2027 பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளன’’ என்றார். இவைதவிர, அணுசக்தி மசோதாவின் கீழ் அணுசக்தி துறையில் தனியார் பங்கேற்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
100 நாள் வேலை திட்டம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்என்ஆர்இஜிஏ) பெயரை மாற்றவும், வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இனி அந்த திட்டம், பூஜ்ய பாபு கிராமீன் ரோஜ்கர் யோஜனா எனவும், வேலை நாட்கள் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

பனிமூட்டத்தால் விமானம் ரத்தானால் கட்டணம் திருப்பி செலுத்தப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:36:29 PM (IST)

சிறிய பொதுத் துறை வங்கிகளை ஒன்றிணைக்க மத்திய அரசு திட்டம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 11:07:37 AM (IST)

இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை ஒளிரச் செய்தார்: பாரதிக்கு பிரதமர் மோடி புகழாரம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:56:32 AM (IST)

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகை : பிரதமர் மோடி வரவேற்பு
புதன் 10, டிசம்பர் 2025 4:22:25 PM (IST)


.gif)