» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலி : இருமல் மருந்து வாங்க புதிய கட்டுப்பாடு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:52:54 PM (IST)
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலியாக மருத்துவர் பரிந்துரை இன்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது என்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கலப்பட இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த மருந்தை தயாரித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆலை மூடப்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்கள் சில இருமல் மருந்துகளை தடை செய்துள்ளன.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு மருத்துவ எச்சரிக்கையை வெளியிட்டது. இது போன்ற இருமல் மருந்துகளின் விநியோகத்தை முறையாக கண்காணிக்காமல் இருப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். என தெரிவித்தது.
இந்நிலையில், மருத்துவர் பரிந்துரை இன்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது என்றும், மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் எனவும் புதிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது உள்ள விதிகளின்படி மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும். வரவிருக்கும் புதிய கட்டுப்பாடுகளின்படி, மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்ய முடியும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதியை நிலை நாட்ட எப்போதும் முயற்சித்தேன் : ஓய்வு பெறும் நாளில் பி.ஆர். கவாய் உருக்கம்
வெள்ளி 21, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

டிரம்ப் வராத தைரியத்தில் மோடி ஜி20 மாநாட்டுக்கு சென்றுள்ளார்: காங்கிரஸ் கிண்டல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:48:56 PM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. கைது!
வெள்ளி 21, நவம்பர் 2025 11:27:37 AM (IST)

பீகார் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் பதவிஏற்பு : பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!
வியாழன் 20, நவம்பர் 2025 4:38:12 PM (IST)

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 20, நவம்பர் 2025 3:31:43 PM (IST)
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்!
வியாழன் 20, நவம்பர் 2025 10:32:13 AM (IST)


.gif)