» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதானி ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவில் இருந்து நீக்கம்!

சனி 15, நவம்பர் 2025 5:34:20 PM (IST)

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ரூ. 62ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கை கட்சியிலிருந்து பாஜக நீக்கம் செய்தது.

அதானி நிறுவனத்துடன் சேர்ந்து பிகார் அரசு ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங்கை கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறிய பாஜக, இதுகுறித்து ஆர்.கே. சிங் விளக்கமளிக்க கோரியுள்ளது.

2,400 மெகாவாட் பாகல்பூர் (பிர்பைண்டி) மின் திட்டத்தை அதானி பவர் லிமிடெட் நிறுவனத்துக்கு பிகார் அரசு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 60,000 கோடி முதல் ரூ. 62,0000 கோடி ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமின்றி, பிகார் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, குற்றவியல் வழக்கு பின்னணி கொண்ட தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஆர்.கே. சிங் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். பதிவில் ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் ஆனந்த் சிங் மற்றும் பிகார் துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆர்.கே. சிங்கை, கட்சியிலிருந்து பாஜக நீக்கியது. மேலும், அவரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்குமாறு பாஜக கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory