» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு!
புதன் 1, அக்டோபர் 2025 11:41:27 AM (IST)
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.16.5 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 16 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.1,754.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,738-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10 முறை முதல்-அமைச்சர் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:55:32 PM (IST)

இண்டிகோ பிரச்சனையால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு: உச்ச வரம்பை நிர்ணயித்த மத்திய அரசு!
சனி 6, டிசம்பர் 2025 5:34:06 PM (IST)

கோயில்களை நிர்வகிக்க சனாதன தர்ம ரக்ஷா வாரியம் தேவை: பவன் கல்யாண் கருத்து
சனி 6, டிசம்பர் 2025 12:12:00 PM (IST)

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்: மோடி - புதின் முன்னிலையில் கையெழுத்து!
சனி 6, டிசம்பர் 2025 10:39:49 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!
சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)

மகாத்மா காந்தி செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது: ரஷிய அதிபர் புதின்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:05:25 PM (IST)


.gif)