» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரூர் துயர சம்பவம்: விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசியில் பேச்சு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:25:52 AM (IST)

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சனிக்கிழமையன்று உடனடியாக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய விஜய், அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
கிட்டத்தட்ட 34 மணி நேரத்திற்கு பிறகே இன்று காலை விஜய் தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். பலத்த பாதுகாப்புடன் விஜய் தனது காரில் புறப்பட்டுள்ளார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விஜயிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம், கேரளம் உட்பட 10 மாநிலத்தில் பணியாற்ற பெண்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்
சனி 11, அக்டோபர் 2025 4:49:09 PM (IST)

ஆப்கான் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்களுக்கு தடை: காங்கிரஸ் கண்டனம்!
சனி 11, அக்டோபர் 2025 12:42:04 PM (IST)

காபூலில் இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்படும் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
சனி 11, அக்டோபர் 2025 8:56:47 AM (IST)

சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:43:10 PM (IST)

மிக இளம் வயதிலேயே பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:50:55 PM (IST)

பிஹாரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:16:21 PM (IST)
