» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
லடாக்கில் 3வது நாளாகத் தொடரும் ஊரடங்கு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 12:31:07 PM (IST)

லடாக் லே நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனர். வன்முறையைத் தொடா்ந்து லே மாவட்டத்தில் புதன்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
லே நகரில் ஏற்பட்ட பரவலான மோதல்களைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்ய உள்துறை அமைச்சகக் குழு தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நிலைமை சீராக உள்ளதாகவும், ஏந்தொரு அசம்பாவிதமும் இதுவரை பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும் வகையில் பிற்பகலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10 முறை முதல்-அமைச்சர் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:55:32 PM (IST)

இண்டிகோ பிரச்சனையால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு: உச்ச வரம்பை நிர்ணயித்த மத்திய அரசு!
சனி 6, டிசம்பர் 2025 5:34:06 PM (IST)

கோயில்களை நிர்வகிக்க சனாதன தர்ம ரக்ஷா வாரியம் தேவை: பவன் கல்யாண் கருத்து
சனி 6, டிசம்பர் 2025 12:12:00 PM (IST)

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்: மோடி - புதின் முன்னிலையில் கையெழுத்து!
சனி 6, டிசம்பர் 2025 10:39:49 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!
சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)

மகாத்மா காந்தி செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது: ரஷிய அதிபர் புதின்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:05:25 PM (IST)


.gif)