» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: டெல்லியில் பிரபல சாமியார் தலைமறைவு
புதன் 24, செப்டம்பர் 2025 5:04:18 PM (IST)
டெல்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான கல்வி நிறுவனத்தின் இயக்குநரான சைதன்யானந்த சரஸ்வதி என்கிற சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சைதன்யானந்த சரஸ்வதி என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி, டெல்லி வசந்த் கஞ்சில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் மீது பதினேழு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான பேச்சு, ஆபாசமான வாட்ஸ்அப்/எஸ்எம்எஸ் உரையாடல் ஆகிய புகார்களை தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி வசந்த் கஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்ததாக டெல்லி காவல்துறையால் வழக்குகள் தொடரப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
விசாரணையின் போது, ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவு (EWS) உதவித்தொகையின் கீழ் படிக்கும் 32 பெண் மாணவிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் 17 பேர், சைதன்யானந்த சரஸ்வதி தங்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினர். சில ஆசிரியர்களும், நிர்வாகிகளும் மாணவிகளை அவரது ஆசைக்கு இணங்க அழுத்தம் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சைதன்யானந்த சரஸ்வதி மீது பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தனர். நிறுவனத்தின் அடித்தளத்தில் இருந்து சாமியார் சரஸ்வதி பயன்படுத்திய போலியான எண் தகடு கொண்ட ஒரு வால்வோ காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10 முறை முதல்-அமைச்சர் : உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:55:32 PM (IST)

இண்டிகோ பிரச்சனையால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு: உச்ச வரம்பை நிர்ணயித்த மத்திய அரசு!
சனி 6, டிசம்பர் 2025 5:34:06 PM (IST)

கோயில்களை நிர்வகிக்க சனாதன தர்ம ரக்ஷா வாரியம் தேவை: பவன் கல்யாண் கருத்து
சனி 6, டிசம்பர் 2025 12:12:00 PM (IST)

இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்: மோடி - புதின் முன்னிலையில் கையெழுத்து!
சனி 6, டிசம்பர் 2025 10:39:49 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!
சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)

மகாத்மா காந்தி செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது: ரஷிய அதிபர் புதின்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:05:25 PM (IST)


.gif)