» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்

வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:25:39 PM (IST)



இந்தியாவின் மூத்த விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், "இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் மிகவும் போற்றத்தக்கவராகத் திகழ்ந்த டாக்டர் கி.கஸ்தூரி ரங்கனின் மறைவுக்கு மிகவும் வருத்தமடைகிறேன். தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அவரது தலைமைப் பண்பு மற்றும் தேசத்துக்கான தன்னலமற்ற சேவை மக்களால் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும்.

இஸ்ரோவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவர், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விடாமுயற்சியுடன் புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றார். இது நாட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்து. அவரது சீரிய தலைமைப் பண்பு நாட்டின் லட்சியமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தப்படுவதை செயலாக்கியது.

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் டாக்டர் கஸ்தூரி ரங்கன் மேற்கொண்ட முயற்சிகளுக்கும், இந்தியாவில் கற்றல் முறையை முழுமையானதாகவும், தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதற்காக நாடு என்றென்றும் அவருக்கு நன்றியுடன் இருக்கும். 

பல இளம் விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் டாக்டர் கி.கஸ்தூரி ரங்கன் திகழ்ந்தார். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி.” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory