» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உண்மைகள் வெளிவந்துள்ளன: சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிறு 17, நவம்பர் 2024 6:06:38 PM (IST)



சாமானியர்கள் பார்க்கும் வகையில், உண்மைகள் வெளிவந்துள்ளன என்று "சபர்மதி ரிப்போர்ட்" படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தி சபர்மதி ரிப்போர்ட் படத்தின் மூலம், சாமானியர்கள் பார்க்கும் வகையில் உண்மைகள் வெளிவந்துள்ளன. ஒரு போலியான கதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். இறுதியில் உண்மைகள் வெளிவந்துவிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் வெளியான படத்தின் டிரெய்லரின் வீடியோவுடன் தன்னை இணைத்து வெளியிட்ட எக்ஸ் வலைதள பயனாளருக்கு பிரதமர் மோடி இவ்வாறு பதிலளித்தார். ஷோபா கபூர், ஏக்தா ஆர் கபூர், அமுல் வி மோகன் மற்றும் அன்ஷுல் மோகன் ஆகியோர் தயாரித்த "தி சபர்மதி ரிப்போர்ட்" படத்தை தீரஜ் சர்னா இயக்கியுள்ளார். இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரிதி டோக்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 27, 2002 அன்று குஜராத்தின் கோத்ரா ரெயில்நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரசின் S-6 பெட்டி எரிக்கப்பட்டு, அயோத்தியிலிருந்து திரும்பிய 59 இந்து பக்தர்கள் எரித்துக் கொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது 'சபர்மதி அறிக்கை'. இந்த சம்பவம் அந்த ஆண்டு குஜராத்தில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

NAAN THAANNov 20, 2024 - 04:25:39 PM | Posted IP 162.1*****

கௌரி லங்கேஷ், கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த இந்திய ஆர்வலர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். அவர் தனது தந்தை பி. லங்கேஷால் தொடங்கப்பட்ட கன்னட வார இதழான லங்கேஷ் பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார், 5 செப்டம்பர் 2017 அன்று ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கர்நாடகாவில் உள்ள இந்து ஆதரவு அமைப்புகள் பெரும் வரவேற்பு அளித்தன பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, விஜயபுராவில் இந்து ஆதரவாளர்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory