» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி

புதன் 2, அக்டோபர் 2024 5:27:58 PM (IST)

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 50-து நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி அஞ்சலி தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான காமராஜரின் 50வது நினைவு நாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமூக வலைதளப் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில், "தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவரான காமராஜரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலிகள். அவரது பணிவு, அர்ப்பணிப்பு, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை நாடு முழுவதும் உள்ள புதிய தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவரது மரபு எப்போதும் நினைவுகூறப்படும், போற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதிவில், "எளிமைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய, இந்தியாவின் சிறந்த மகன் காமராஜருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம். தமிழக மக்களால் மதிக்கப்பட்ட அவர், சமூக நீதி, நலனுக்காக வாதிட்டவர். முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருதை பெற்றவருமான காமராஜர், மதிய உணவு திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களை அறிமுகபடுத்தியதன் மூலம், வசதியில்லாத குழந்தைகளின் இலவசக் கல்விக்கு வழிவகுத்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory