» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்: ரயில்வே அமைச்சர் விளக்கம்

புதன் 10, ஜூலை 2024 3:46:53 PM (IST)

லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் "லோகோ பைலட்டுகள் ரயில்வே குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர்கள். லோகோ பைலட்டுகளின் பணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. அவசர காலங்களில் மட்டுமே லோகோ பைலட்டுகளின் பணி நேரம் சற்று அதிகமாக இருக்கும்.

லோகோ பைலட்டுகளுக்கு பயணங்களுக்கு பிறகு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சராசரியாக ஜூன் மாதத்தில் 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே பணி நேரம் உள்ளது. 2014க்கு பிறகு ரயில்களில் ரயில் ஓட்டுநர் அறை உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆள் சேர்ப்புப் பணிகள் முடிந்து 34,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை விமர்சிக்கின்றனர். போலிச் செய்திகளால் ரயில்வே குடும்பத்தை சீரழிக்கும் முயற்சி தோல்வியடையும். லோகோ பைலட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். நாட்டிற்கு சேவை செய்வதில் அனைத்து ரயில் நிர்வாகமும் ஒன்றுபட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory