» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் : மெளனம் கலைத்த தேவகவுடா கருத்து!

சனி 18, மே 2024 4:47:28 PM (IST)



பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என, அவரது தாத்தாவும், மஜத தலைவருமான தேவகவுடா கூறியுள்ளார்.

மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேவகவுடா எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது முதல் முறையாக இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்த தேவகவுடா நிருபர்களிடம் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கட்சி சார்பாகவும், குடும்பம் சார்பாகவும் குமாரசாமி பேசியுள்ளார். சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமை. 

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களின் பெயரை கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார்.

குற்றவாளி எனும் போது பிரஜ்வல் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், அவர் மீதான வழக்கு எப்படி பதியப்பட்டது என்பது குறித்தும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory