» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நியூஸ் க்ளிக் நிறுவனர் கைது சட்டவிரோதம்: விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதன் 15, மே 2024 11:56:26 AM (IST)

நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா ஊபா (UAPA) எனும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த ஆண்டு, 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை நியூஸ் கிளிக் நிறுவனம் தொடங்கியது. வெளிநாட்டில் இருந்து ஆதரவைப் பெற்று இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம், நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு நிதி உதவி செய்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து News Click செய்தி இணைய தள நிறுவனமானது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 3 ஆண்டுகளில் ரூ38.05 கோடி பணம் பெற்றது என வழக்கு தொடரப்பட்டது. சீனாவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடவே வெளிநாடுகளில் இருந்து இந்தப் பணம் பெறப்பட்டது என்பதும் புகார். சட்டவிரோத இந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் டெல்லியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளின் போது சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கி இருந்த செய்தியாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யபட்டன.
அத்துடன் நியூஸ் க்ளிக் (நியூஸ் கிளிக்) செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாதுகாப்புச் சட்டம் "ஊபா” (UAPA)-ன் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தன. இந்த நடவடிக்கைக்கு "இந்தியா” கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தனர். இதனிடையே தமது கைது நடவடிக்கைக்கு எதிராக பிர்புர் புர்க்யஸ்தா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிர்புர் புர்க்யஸ்தாவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் துயர சம்பவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
வெள்ளி 3, ஜூலை 2026 4:26:43 PM (IST)

எத்தனால் கலப்பால் மைலேஜ் சற்றுக் குறைய வாய்ப்பு : மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஒப்புதல்!
வெள்ளி 3, ஜூலை 2026 11:52:24 AM (IST)

இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்கள் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு: சானே டகாயிச்சி உறுதி!
வியாழன் 2, ஜூலை 2026 5:00:33 PM (IST)

பீகார், குஜராத் உள்பட 3 மாநிலங்களில் 30-ம் தேதி இடைத்தேர்தல் : தமிழகத்திற்கு அறிவிப்பு இல்லை
வியாழன் 2, ஜூலை 2026 4:00:09 PM (IST)

ஓய்வூதியமும் மருத்துவக் காப்பீடும் இணைந்த மத்திய அரசின் புதிய திட்டம் : விரைவில் அறிமுகம்!
வியாழன் 2, ஜூலை 2026 11:48:48 AM (IST)

சர்வதேச சந்தை எதிரொலி: வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்தது
புதன் 1, ஜூலை 2026 11:51:58 AM (IST)


