» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி முழுவதும் ஒரு மாதத்துக்கு 144 தடை அமல்: காவல் ஆணையர் உத்தவு!

திங்கள் 12, பிப்ரவரி 2024 12:51:18 PM (IST)

 டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12 வரை 144 தடை பிறப்பித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதத்திற்கான சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் நாளை(பிப்.13) டெல்லி நோக்கி அணிவகுத்துச் செல்ல அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கிச் செல்லவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மூன்று மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லைகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கடந்த 2020 போராட்டம் போன்ற சூழல் ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.  இந்த நிலையில், டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12 வரை 144 தடை பிறப்பித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். டெல்லி எல்லைக்குள் போராட்டம், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், டிராக்டர், லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory